Sunday, August 27, 2017

பனைக்குளம் மவ்லானா மவ்லவி செய்யது முஹம்மது மதனீ ஆலிம் எழுதிய ஈமானின் ஒளி விளக்கு நூல் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்



அல்லாஹ் என்பதற்கு விளக்கம், இறுதிநாளின் வருனணை, சுவர்க்கம், நரகம் பற்றிய விவரங்கள், மலக்குகள், ஜின்கள் பற்றிய விரிவுரைகள், மரணமும்-மறுவாழ்வும் பற்றிய தெளிவுரைகள், புதை குழியில் கேள்வி கணக்கு நடக்கும் நிகழ்ச்சியின் உண்மைகள்- இப்படி மறைவான விஷயங்கள் பற்றிய நிறைவான விளக்கத் தொகுப்பாக இந்நூல் அமைந்திருக்கிறது.
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
 
மாநில தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
அல்லாஹ்வின் ஸிஃபத்துகளையும் அதில் ஏற்படும் சந்தேகங்களையும் நீக்கும் வண்ணம் தெளிவான ஆய்வை விவரித்துள்ளார்கள். மேலும் மலக்குமார்களைப் பற்றிய கொள்கைகளில் சம்பூரணமான தெளிவை இந்நூலில் பெற்றுக் கொள்ள முடிகின்றது. அத்துடன் ஈமானைப் பற்றி அனைத்து பகுதிகளையும் ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மவ்லவி அல்ஹாஜ் செய்யிது நியாஸ் அஹ்மது ஜமாலி M.A

முதல்வர் தாருல் உலூம் ஜமாலியாஅரபுக் கல்லூரி, சென்னை-12.

பல நூல்களைப் படித்து சில கருத்துக்களை அறிவது ஒருவகை. ஒரு நூலைப் படித்து ஓராயிரம் கருத்துக்களை அறிவது இன்னொரு வகை. இரண்டாம் வகையைச் சார்ந்த கருத்துச் செல்வமே நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் ஈமானின் ஒளிவிளக்கு என்ற நன்னூல்.
ஒவ்வொரு இஸ்லாமியனும் அறிய வேண்டிய ஈமானின் அடிப்படைக் கருத்துக்கள் இந்நூலில் நிரம்பிக் கிடக்கின்றது என்று கூறுவதில் மிகையில்லை.
மௌலவி அல்ஹாபிழ் அப்ஸலுல் உலமா
 
எம் . ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி எம்.ஏ
சுன்னத் ஜமாஅத் பேரியக்கத்தின்  தலைவர்

ஈமான் என்றால் என்ன? என்ற வினாவோடு இந்த நூலை துவங்கியிருக்கும் ஆசிரியர் அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி அறியப்பட வேண்டியவைகளை, மலக்குகள், வேதங்கள், ரஸூல்மார்கள், மறுமையின் நிகழ்வுகள், களாகத்ர் என்னும் விதிகள் என ஈமானின் அடிப்படைகளான ஆறு விசயங்களையும் அங்குலம் அங்குலமாக விவரித்து விளக்கி இருக்கும் விதம் ஈமான் குறித்து முழுமையாக அறிய விரும்புவோருக்கான வரப்பிரசாதமாகும்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு விஷயங்களையும் தனித்தனியாக தலைப்பிட்டு எடுத்தியம்பி இருக்கும் விதம் ஆசிரியரின் அழகிய எழுத்துப் புலமையை பறைசாட்டுகின்றது.

மௌலானா மௌலவி அப்ஸலுல் உலமா, ஷைகுல் ஹதீஸ்
அல்ஹாஜ் V.V.A. ஸலாஹுத்தீன் ஆலிம் ஜமாலி , பாஜில் உமரி
இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு அரசு காஜி


No comments:

Post a Comment